
- அந்தந்தக் காலத்தின் சமூகப் பிணிகளைக் கண்டறிதல்: மறுமலர்ச்சிப் பணி மேற்கொள்ளப்படும் காலத்தின் நிலைமைகளையும் குழல்களையும் நுணுக்கமாக ஆராய்ந்து, ‘அறியாமை’ எங்கு, எந்த அளவுக்குப் புகுந்துள்ளது, அதற்கான காரணம் என்ன, அதன் வேர்கள் எங்கிருக்கின்றன, அக்காலகட்டத்தில் இஸ்லாம் வகிக்கும் நிலை என்ன என்பதை அறிதல்.
- சீர்திருத்தத்துக்கான திட்டம்: இஸ்லாத்துக்கு மாறானவற்றின் சக்தியைத் தகர்த்து, வாழ்க்கையை முழுமையாக இஸ்லாத்தின் ஆதிக்கத்துக்கு உட்படச் செய்வதற்கு எங்கு தாக்குதலை நடத்த வேண்டும் என்பதைத் தீர்மானித்தல்.
- வளங்கள் மேலாண்மை : மறுமலர்ச்சிப் பணிகளை மேற்கொள்பவர்களுக்குள்ள வளங்களையும், அவர்களால் எந்த அளவிற்கு செயலாற்ற முடியும் என்பதையும் மதிப்பீடு செய்தல். அவர்களுக்குள்ள சக்தியை மதிப்பிட்டு சீர்திருத்தத்தைக் கொண்டுவருவதற்கு எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்பதைத் தீர்மானித்தல்.
- அறிவுப் புரட்சி: மக்களின் கருத்துகள், நம்பிக்கைகள், ஒழுக்கத் தரங்கள் என்பவற்றை இஸ்லாமிய அடிப்படையில் செப்பனி டுதல், கல்விமுறையைச் சீரமைத்தல், பொதுவாக இஸ்லாமியக் கலைகளுக்கும் உளப்பாங்குக்கும் புத்துயிரூட்டுதல்.
- செயல் ரீதியான சீர்திருத்தம்: தீய பழக்க வழக்கங்களை ஒழித்தல், பண்பாடுகளைத் தூய்மையாக்குதல், ஷரீஅத் சட்டங்களைக் கடைப்பிடிப்பதற்கான உணர்வை ஏற்படுத் துதல், இஸ்லாமியத் தலைமைக்கான ஆட்களை உருவாக்குதல்.
- இஜ்திஹாத்: இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை விளங்கிக்கொள்வது, மறுமலர்ச்சிக்கான காலத்தின் கலாச்சாரத்தையும் அதன் போக்குகளையும் இஸ்லாமிய உரைகல்லைக் கொண்டு மதிப்பிடுதல், இஸ்லாத்தின் நோக்கங்களை அடைவதற்காகவும் திருத்தப்பெற்ற சமூக அமைப்பின் தலைமைப் பொறுப்பு இஸ்லாத்திடம் இருக்கும் வகையிலும் அக்கால சமூக வாழ்க்கையில் ஷரீஅத் அடிப்படையில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் யாவை என்பதை தீர்மானித்தல்.
- இஸ்லாத்தைப் பாதுகாத்தல்: இஸ்லாத்தை அடக்கி, ஒடுக்கி ஒழித்துவிட நாடும் அரசியல் சக்திகளை எதிர்த்துப் போராடுதல், இஸ்லாத்தை ஒரு வாழும் சக்தியாக திகழச் செய்வதற்காக அந்த எதிரி சக்திகளின் வலிமையைத் தகர்த்தெறிதல்.
- இஸ்லாமிய முறைக்குப் புத்துயிரூட்டுதல்: இஸ்லாத்திற்கு முரணான சக்திகளின் கைகளில் இருந்து அதிகாரத்தைப் பறித்து, ‘நபித்துவத்தை அடியொற்றிய கிலாஃபத்’ எனும் முறையிலான அரசை மீண்டும் நிறுவுதல்.
- உலகளாவிய புரட்சி:ஏற்கனவே முஸ்லிம்கள் வாழ்கின்ற ஓரிரு நாடுகளில் இஸ்லாமிய வாழ்க்கை முறையை நிறுவுவதோடு திருப்தியடையாமல், மனித சமுதாயம் முழுவதிலும் இஸ்லாத்தின் சீர்திருத்தப் புரட்சித் தூதைப் பரப்புவதற்கும், உலகில் இஸ்லாத்தை ஆதிக்கப் பண்பாட்டு சக்தியாக மாற்றி மனித இனத்தின் அறிவு, அரசியல், ஒழுக்கத்துறை தலைமையைக் கைப்பற்றவும் வலிமைமிக்க உலகளாவிய இயக்கத்தை தோற்றுவித்தல்.
- மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) (‘இஸ்லாமிய மறுமலர்ச்சி’ நூலில் இருந்து…)
தொகுப்பு: ஆர்.அபுல் ஹசன்

