
அறிமுகக் குறிப்பு
நவீன இஸ்லாமியச் சிந்தனை கருத்தாடல்களில் பங்கு-கொள்ளும் தென்னாபிரிக்க இஸ்லாமிய சிந்தனையாளர் பரீத் இஸாக். சர்வதேசரீதியில் பல்வேறு தளங்களில் தனது கருத்துக்–களை விவாதித்து வருகின்றார். தற்போது இவர் ஜொஹன்னஸ்பேர்க் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய கற்கைகள் துறையில் பணியாற்றி வருகிறார். Howard University, Berlin University, Cambridge University போன்றவற்றிலும் பேராசிரியராக இருந்துள்ளார். மட்டுமன்றி, அம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தில் நெல்சன் மண்டேலாவின் சிறப்பு விரிவுரைத் தொடரை ஆரம்பித்து வைத்தவர் பேராசிரியர் பரீத் இஸாக் என்பது குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் பரீத் இஸாகின் ’Al Qîran, Plîrali‡m and the Liberation Theology’ என்ற நூல் நவீன இஸ்லாமியச் சிந்தனை தொடர்பான கலந்துரையாடலுக்கான அவரது சிறந்த பங்களிப்பு எனலாம். சமூக விடுதலைக்காக பன்மைச் சமூகத்தில் வாழும் ஒரு முஸ்லிம் எவ்வாறு பங்களிப்புச் செய்யவேண்டும் என்பதற்கு திருக்குர்ஆன் என்ன வழிகாட்டுதல்கள் வழங்குகிறது என்று அந்த நூல் பேசுகிறது. ‘அல்குர்ஆனும், விடுதலை இறையியலும்’, ‘அல்-குர்ஆனின் நிழலில் வன்முறையும் விடுதலை இறையியலும்’, ‘சமகால உலகில் நடுநிலைச் சமூகத்தின் இயங்குதளம்’ போன்றவை சர்வதேச ரீதியில் பேராசிரியர் பரீத் இஸாக் ஆற்றிய பிரபல்யமான ஆய்வுரைகளாகும். மேற்குலக அறிவுஜீவிகள் மட்டத்தில் ’Al Qîranic Scholar’ என பலரும் அவரை அழைப்பதுண்டு. 2006ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில்இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (sio) நடத்திய ஆய்வு மாநாட்டில் ‘Towards understanding Islamic theology of Liberation’ என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் சுருக்கத்தை இக்கட்டுரை தொகுத்தளிக்கிறது.
இஸ்லாமிய விடுதலை இறையியல்
‘இஸ்லாமிய விடுதலை இறையியலைப் புரிந்துகொள்வதை நோக்கி’ என்ற வாக்கியத்தில் இஸ்லாமியச் சிந்தனை (I‡lamic thoîght), விடுதலை இறையியல் (Liberation theology) மற்றும் நோக்கி (Toward‡) என மூன்று சொற்கள் உள்ளடங்கியுள்ளன. அவற்றில் இஸ்லாமியச் சிந்தனை என்பது இஸ்லாமிய மூலாதாரங்களை அல்லது அவை முன்வைக்கும் மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு கருத்துநிலைக்கு வருவதாகும். இதுவொரு மனித அறிவு சார்ந்த செயல்பாடு. எனவேதான், எனது தலைப்பில் ’Toward‡’ (நோக்கி) என்ற சொல்லையும் இணைத்திருக்கிறேன்.
உண்மையில்,ஒருபடித்தான இஸ்லாமிய நிலைப்பாடு எடுக்கச் சொல்லி நம்மை வலியுறுத்துவது என்பது ஒரு வகையான அறிவுச் செறுக்குடன் தொடர்புபட்டது.இஸ்லாமியப் புரிதலொன்றைக் கட்டியெழுப்புவதற்குகூட்டுச் செயல்பாடே முக்கியம். அதிலொருசிறுபங்களிப்பையே நான் அளிக்க முயல்-கிறேன். மேலும், மூன்றாவது சொல்லான ‘விடுதலை இறையியல்’ என்பதே நமது கருத்தாடலுக்கான பிரதான கருப்பொருளாகும்.
விடுதலை இறையியலுக்கான அடிப்படைகள்:
குர்ஆனின் விடுதலை கருத்தாக்கம் இரண்டு அடிப்படைகளைக் கொண்டது என்பது எனது புரிதலாகும்.
முதலாவது, ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, புறக்கணிப்பட்ட மக்களுக்காக (Marginalized Commînity) நமது சிந்திப்புகளில் அதிக இடத்தை கொடுத்தலும், அத்தகைய மக்களின் தேவைகள், அபிப்பிராயங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு செவிசாய்த்தலு–மாகும். இந்த பரப்பெல்லையில் உள்ள மக்களை அடையாளப்-படுத்துவதற்காக குர்ஆன் ‘அல் முஸ்தல்அபூன்’ (பலவீனப்பட்ட-வர்கள்) என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. இந்த வகையில் சமூகத்தளத்தில் பலவீனப்பட்டவர்களை மீட்டெடுப்பதற்கு இஸ்லாமிய வழிகாட்டுதல்களை எவ்வாறு நகர்த்திச் செல்வதை ‘இஸ்லாமிய விடுதலை இறையியல்’ என வரையறை செய்யலாம்.
‘யார் எமது விடயத்தில் முயற்சி செய்கின்றாறோ, அவர்களுக்கு பல வழிகளை நாம் திறந்து கொடுப்போம்’ என்ற திருமறை வசனம் இஸ்லாமிய விடுதலை இறையியலின் இரண்டாவது அடிப்படையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. அதாவது, ‘இதோ எனது வேத வரிகள் இருக்கின்றன, இதைப் பின்பற்றினால் நீங்கள் விடுதலையடைவீர்கள்’ என்று குர்ஆன் கூறவில்லை. மாறாக, எனது வழிகாட்டல்களின் ஒளியில் நீங்கள் தொடர்ச்சியாகப் பயணிக்கும்போது, வெற்றிக்கான பல்வேறு வழிகளை நீங்கள் அடைந்துகொள்வீர்கள் என்றே கூறப்படுகிறது. எனவே, வரிக்கு வரி குர்ஆனைப் பின்பற்றுவதால் அடைந்துகொள்ளும் இலக்கல்ல ‘விடுதலை’ என்பது. மாறாக, எப்படி ஒரு சமூகம் தனது விடுதலைக்காக சிந்திக்கிறது? திட்டமிடுகிறது? எவ்வாறு விடுதலையை மிகச் சரியாகப் புரிந்து கொள்கிறது? என்பதும் சமூக விடுதலைக்கு அவசியமாகும். இது குர்ஆன் முன்வைக்கும் விடுதலைக் கோட்பாட்டிற்கான இரண்டாவது அடிப்படையாகும்.
பலவீனமானவர்களின் மீதான அல்லாஹ்வின் அருள்:
சமூக விடுதலை பற்றிய குர்ஆனியச் சிந்தனையை ஸூரா அல்கஸஸின் ஆரம்ப வசனங்கள் மிகத் தெளிவாகவே குறிப்பிடு-கின்றன. அதில் ‘பூமியில் பலவீனமானவர்களாக இருந்தவர்கள் மீது நாம் எமது அருளை பொழிந்தோம். இன்னும், அவர்களை நாம் பூமியின் ஆட்சியாளர்களாகவும் மாற்றினோம். பூமியின் வாரிசுகளாகவும் ஆக்கினோம்’ என அல்கஸஸின் இரண்டாவது வசனம் பேசுகிறது. மேற்கூறப்பட்ட திருமறை வசனம் இரண்டு மிகப் பிரதானமான கருத்துக்களை சமூக விடுதலை தொடர்பாக கோடிட்டுக் காண்பிக்கிறது.
முதலாவது, அல்லாஹ் பலீனமானவர்களுக்கு அருள்பாளித்–தான் என்பது. அப்படியென்றால், அல்லாஹ் ஏனைய மனிதர்-களுக்கு அருள்பாளிக்க வில்லையா? என்ற கேள்வி எழுகிறது. பலவீனமானவர்களுக்கு ஆட்சியைக் கொடுத்தான் என்று வருகிறது. அவ்வாறென்றால், ஏனையவர்கள் ஆட்சிபுரிவதை அல்லாஹ் விரும்பவில்லையா? என்ற மயக்கம் ஏற்படுகிறது. உண்மையில், சமூகப் போராட்டத்தில் பலவீனமானவர்களை அல்லாஹ் மையப்படுத்துகிறான். இஸ்லாமியப் போராட்டத்தில் மைய நிலை ‘பலவீனமானவர்களை பாதுகாத்தலாகும்’ என்ற உட்பொருளை உணர்த்துவதற்கே குர்ஆன் இங்கு முயற்சிக்கிறது. பலவீனமானவர்கள் என்ற வட்டத்திற்குல் உரிமை மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட மற்றும் அடிமைப்படுத்தப்பட்ட சகலரையும் உள்ளடக்க முடியும்.
அடுத்து, ‘ஏன் நாம் பலவீனப்பட்டவர்களை பூமியின் ஆட்சி-யாளர்களாக மாற்றினோம் என்றால், பிர்அவுனும், ஹாமானும் எதைக் கண்டு பயந்து கொண்டிருந்தார்களோ (தங்களது ஆதிக்கம், அதிகாரம் இல்லாமல் போகலாம்), அதை அவர்களுக்குக் காண்பிப்பதற்காக’ என்பது குறித்த ஸூரா அல்கஸஸினுடைய வசனத்தின் இரண்டாவது பகுதியாகும். இவ்வசனம் ஆழமான யதார்த்தமொன்றைச் சொல்கிறது. பிர்ஆனும், ஹமானும் ஆட்சி பீடத்தில் இருக்கும்போது பலவீனர்களாக இருந்த பனூஇஸ்ரேவ-லர்கள் சுதந்திரமாக முடியாது என்பதாகும். ஏனெனில், அவர்களில்இருவரும் (பிர்அவன், ஹமான்) திட்டமிட்ட முறை-வழியொன்றுக்கு (Sy‡tem) ஊடாக மக்களைப் பலவீனப்படுத்தி வைத்திருந்தனர். இதனால்தான், ‘பலவீனமானவர்கள்’ என்ற வசனத்தை பயன்படுத்தாது ‘உஸ்துல்இபூ’ (பலவீனப்படுத்தப்-பட்ட–வர்கள்) என்ற பிரயோகத்தை திருக்குர்ஆன் பயன்படுத்துகிறது.
அதாவது, யாரும் இயற்கையாக பலவீனப்படுவதில்லை. திட்டமிடப்-பட்ட முறையொன்றின் வழியாக மனிதர்கள் ‘பலவீனப்படுத்தப்படுகிறார்கள்;’ என்றே அல்குர்ஆன் கூறுகிறது. இவ்வாறு மக்களைப் பலவீனப்படுத்தும் இயந்திரத்தின் அத்திவாரத்தை அசைக்காத வரை, மக்களை விடுதலை செய்ய முடியாது. எனவே, சமூக விடுதலை என்பது சமூகத்தை அடிமைப்–படுத்தும் காரணிகளை அடையாளம் கண்டு, அதற்கெதிராகப் போராடுவதன் மூலமே நிகழ முடியும் என குர்ஆன் இங்கு வாதிடு–கிறது. மறுபுறம், சமூகத்தைப் பலவீனப்படுத்தும் காரணிகளுடன், முறைமைகளுடன் நேர்மறையாக உறவாடுவதும், அதனுடன் ஆறத் தழுவி சமாதானம் செய்துகொள்வதும் சமூக விடுதலைக்-கான பாதையாக இருக்க முடியாது என்பது குர்ஆனிய சிந்தனை–யாகும்.
அவ்வசனம் சமகால ‘சமூகவிடுதலை’ பற்றிய பிழையான புரிதலொன்றையும் எமக்குக் கற்றுத் தருகிறது. இன்றைய உலகத்தில் பாதிக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட, ஆக்கிரமிக்கப்-பட்ட பலர் வாழ்கின்றனர். அவர்களுக்கு உதவி செய்வதற்கு பல்வேறு இஸ்லாமிய இயக்கங்கள், நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதை’ஹைராத்’ (சமூகநலன்) என மிகப் பெரிய விளம்பரத்துடன் மேற்கொள்-கின்றன. ஆனால், அவர்கள் ஒடுக்கப்பட்டதற்கான, உரிமை மறுக்கப்–பட்டதற்காக காரணியை அடையாளம் கண்டு, அதற்கெதிராக சவால் விடுவதற்கு யாரும் தயாராக இல்லை. ‘மூஸாவே நீங்கள் பிர்அவ்னிடம் சென்று ஏன் நீ மக்களை அடிமைப்படுத்துகிறாய் என்று கேளும்’ என்பதே அல்குர்ஆனின் வழிகாட்டலாகும். மக்களைப் பலவீனப்படுத்தும் முறைமையை, காரணியை எதிர்த்து நிற்க அல்லாஹ் மூஸாவை ஏவினானே தவிர, பாதிக்கப்பட்ட பனூ இஸ்ரேவேலர்களுக்கு உதவி செய்யுமாறு சொல்லவில்லை.
இன்றுசமூக நலப் பணிகளை பலரும் சமூக விடுதலைக்கான பணியாக கருதுகின்றனர். ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வது குர்ஆனின் கண்ணோட்டத்தின்படி விடுதலைச் சிந்தனைஆகாது. உண்மையில், அது வெறும் தர்மம் சார்ந்த நோக்கை (Charity per‡pective) அடிப்படையாகக் கொண்டதாகும். இஸ்லாம் இதற்கும் பெருமளவுக்கு முக்கியத்துவத்தைக் கொடுக்-கிறது. ஆனால், இஸ்லாம் அதைவிட ‘நீதியை அடிப்படையாகக் கொண்ட நோக்கையே (யிustவீநீமீ ஜீமீக்ஷீsஜீமீநீtவீஸ்மீ) முதன்மையானதாகக் கருதுகிறது.
இஸ்லாமிய நிறுவனங்கள் மற்றும் இயக்கங்கள் பாதிக்கப்-பட்டவர்களுக்கு உதவி செய்வதற்கு தன்னைத் தயார்படுத்துவது போலவே, மக்களைப் பாதிப்புக்கு உட்படுத்தும் முறைமைக்கு (ஷிஹ்stமீனீ) சவால் விடுக்கவும்வேண்டும். இம்முன்னுரிமையைத் தவற-விடும் பட்சத்தில், மக்களைப் பாதிப்புக்கு உட்படுத்தும் முறைமையிடமே பணம் பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் அணுகுமுறைக்குள் நாம் நுழைந்து விட வழியேற்படலாம். இதைப் புரிந்து கொள்வதற்கு ஒரு உதாரணத்தை சொல்லிக்காட்ட விரும்புகிறேன்.
நதிக் கரையில் ஒருவர் வாழ்ந்து வருகிறார். ஒருமுறை நதியில் அடிபட்டு வந்து சிறிய கைக்குழந்தையொன்றைக் காண்கிறார். உடனே, அக்குழந்தையைக்காப்பாற்றி கவனமாக தனது வீட்டில் வளர்க்கிறார். மீண்டும் அடுத்தநாள் மற்றொரு குழந்தை அதே நதியில் அடிபட்டு வருகிறது. அதையும் காப்பாற்றி வீட்டில் வைத்துக் கொள்கிறார். இவ்வாறு ஒரு மாதம்முழுக்க நடைபெறு-கின்றது. ஆக, 30 குழந்தைகள் அவரது வீட்டில் வந்து சேர்ந்து விடுகின்றன. பின்பு, அந்த அநாதைக் குழந்தைகளை வளர்ப்பதற்-காக ‘அநாதை மடமொன்றை’ அவர் ஆரம்பிக்கிறார். அங்கு வரும் பலரும் ‘எவ்வளவு சிறந்த சமூக நலப் பணியில் ஈடுபட்டிருக்கிறார் இந்த மனிதர்’ என அவரைப் புகழ்ந்து விட்டுச் செல்கிறார்கள். அப்போது அங்கு வந்தவர்தன்னை மனிதநேயவாதி மாதிரி அறிமுகம் செய்துவிட்டு, ‘நீ செய்யும் இந்த நல்ல காரியத்திற்கு நான் மாதம் தோறும் குறிப்பிட்டதொரு தொகை உதவி செய்கிறேன். இந்த நதியோரமாக இரண்டு மைல் தூரம் வந்தால், எனது வீட்டை உன்னால் அடைந்துகொள்ள முடியும். அங்கு வந்து பணத்தை ஒவ்வொரு மாதமும் பெற்றுக் கொள்ளலாம்’ என்கிறார். சில நாள்கள் உருண்டோடுகின்றன.உதவித் தொகை தருவதாகச் சொன்னவனேநதியில் குழந்தைகளை வீசிவருபவன் என்ற அதிர்ச்சித்தகவல் அநாதைகள் பராமரிப்பு மையத்தின் நிறுவனருக்குத் தெரியவருகிறது.
முதலாளித்துவ உலகம் என்பது இதுமாதிரிதான். நதியில் முதலாவது குழந்தையைக் கண்டவுடனேயே, அக்குழந்தையை நதியில் வீசியவன் யார்? அவன் ஏன் குழந்தையை வீசுகிறான்? என சமூகநலச் சேவை புரியும் மனிதன் தேடியிருந்தால், சமூகத்-திற்கு எதிரான செயலை மேற்கொள்பவனைஆரம்பத்திலேயே அடையாளம் கண்டிருக்க முடியும். மட்டுமன்றி, அடுத்த 29 குழந்தைகளும் உயிர் தப்பியிருக்க வாய்ப்புண்டு.
இவ்வாறுதான், நாம் தர்ம நோக்கிற்கு முக்கியத்துவம் கொடுத்து, நீதி நோக்கை இரண்டாம் பட்சமாகக் கருதும்போது சர்வதேச குற்றவாளிகள் சமதான நீதவான்களாக மாறிவிடுகின்–றார்கள். இந்த விடயத்தில் இஸ்லாமிய அமைப்புகள், இயக்கங்கள் மற்றும் தனிமனிதர்கள் கவனமாக இருக்கவேண்டும். நீதியையும், தர்ம நோக்கையும் செயற்படுத்தும்போது, இவ்விரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளையும்சமூகத் தளத்தில் இவை ஏற்படுத்தும் விளைவுகளையும்புரிந்துகொள்வது மிக முக்கிய-மானதாகும். ஏனெனில், நமது தர்ம நோக்கு அநீதிக்கு குடை–பிடிப்பதாய் அமைந்துவிடக் கூடாது.
குர்ஆன் ‘அல்வஸத்’ என முஸ்லிம் சமூகத்தை வர்ணிக்கிறது. அதாவது, மனித சமூகத்திற்கு சான்று பகிர்வதற்கான நடுநிலைச் சமூகம் என்றுமுஸ்லிம் உம்மாவை அல்லாஹ் குறிப்பிடுகிறான். உண்மையில் ‘அல்வஸத்’ என்ற வார்த்தைக்கு பல்வேறு விளக்கங்-களை தஃப்ஸீர் அறிஞர்கள் முன்வைத்துள்ளனர். அதிலும், குறித்த பதப் பிரயோகம் பல்வேறு வரலாற்றுக் கால கட்டங்களில் பல்வேறு நோக்கில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஆரம்ப கால தஃப்ஸீர் ஆசிரியர்கள் ‘அல்வஸத்’ என்ற வசனத்தை ‘அல்அத்ல்’ நீதியான சமூகம் என்று விளக்கமளித்துள்-ளதை அவதானிக்க முடிகிறது. அதாவது, விவகாரங்களை நீதியாக அணுகும் சமூகம் என்று பொருள் கோடல் செய்ய முடியும். நீதி என்பது விடுதலை இறையியலுக்குஆதாரமான விழுமியமாகும்.
எனவே, நடுநிலைச் சமூகமொன்றின் முக்கியப் பணியாகவும் அதிகாரங்களால் அநீதியாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் மனித சமூகத்தை விடுதலை செய்வதையும், அவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்காக உழைப்பதையும் நோக்கியே அமைய முடியும் என அழுத்தமாகக் கூறலாம். அதுமாத்திரமன்றி, வஹி இறங்கிய ஆரம்ப வரலாற்றுக் கட்டங்களில் தக்வா,ஈமான், ஜிஹாத்போன்ற குர்ஆனியப் பதங்களை விடுதலைக் கோட்பாடு-களாவே நபி (ஸல்) அவர்களை எதிர்த்த சமூகங்கள் விளங்கியிருந்தன. அன்றைய சமூகத்தைக் கட்டுப்படுத்திய அடிமைத்துவம், பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள், கோத்திர வெறி முதலான–வற்றுக்கு எதிரான விடுதலைச் சித்தாந்தமாகவே திருக்குர்ஆனின் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
தமிழில்: சகிஃபவுஸ்


