மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியும் அவர் அளித்த விளக்கமும்
கேள்வி: இஸ்லாமிய ஆட்சிக்கும் சோசியலிசத்திற்கும் இடையே உள்ள வேற்றுமையை எவ்வாறு எடுத்துரைக்கலாம்?
பதில்: இஸ்லாமிய ஆட்சி பல உயர்ந்த நோக்கங்களைக் கொண்டது. இப்படி எதுவும் எந்த ‘இஸத்’திலுமில்லை. இஸ்லாமிய ஆட்சி மனிதனை மேலும் உயர்ந்த மனிதனாக மாற்றும் திட்டத்தைக் கொண்டது. இதர ஆட்சிமுறைகள் யாவும் மனிதனை ஓர் இயந்திரமாகவோ அல்லது மிருகமாவோ மாற்றுகின்றன. மனிதனுக்குரிய உண்மையான நலனும் வெற்றியும் இஸ்லாமிய ஆட்சியில் மட்டுமே உள்ளன. தேவைகளைக் கொண்ட ஒரு மனிதனை காணும்போது நமது உள்ளங்களில் உதவி செய்யவேண்டிய உணர்ச்சிகள் பிறக்கின்றன. நீங்கள் தேவைகளை விசாரித்து அறித்து, அவற்றைப் பூர்த்தி செய்கிறீர்கள்.
அவன் கடன்காரனாக இருந்தால், நீங்கள் அவனுடைய கடனை அடைக்கிறீர்கள். அவன் வியாபாரம் செய்து சுயமாக நிற்க விரும்புகிறான்; ஆனால் முதலீட்டிற்கு வழியின்றி தவிக்கிறான். நீங்கள் அவனுக்கு உதவுகிறீர்கள்.
- அல்லாஹ்விற்காக அல்லாஹ்வின் மகிழ்ச்சிக்காக நீங்கள் இவ்வாறு செய்யும்போது, ஆத்மாவிற்குப் பயிற்சி கிட்டுகிறது. அல்லாஹ்வின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை, அவனுடன் உங்களுடைய தொடர்பை வலுப்படுத்துகிறது. இதனால் நீங்கள் ஒரு நல்ல அங்கத்தினராகவும் மாறுகிறீர்கள்.
*மறுபக்கம், தேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட மனிதனின் உள்ளத்தில் உங்கள்பால் நல்லெண்ணம் சுரக்கிறது. யாருடன் நாம் நல்லபடியாக நடந்து கொள்கிறோமோ அவருடைய உள்ளத்திலும் நன்மை செய்வதற்கான எண்ணங்கள் உருவாகின்றன.
- இவ்வாறு முறையில் இஸ்லாமிய ஆட்சி ஒருவர் மற்றவரை நேசிக்கிறார். இறைவனுடன் உள்ள தொடர்பு வலுவடைய வாய்ப்புகள் கிட்டுகின்றன.
*இதற்கு மாறாக ஒரு முதலாளித்துவ ஆட்சியில் ஒவ்வொருவரும் தன்னுடைய மையப் ஆகவே சுயநலனையேமுதலில் கருதுகின்றார்கள். சுய முன்னேற்றத்தைப் பற்றியே கவலைபடுகிறார்கள்; சிந்திக்கிறார்கள். இதற்காக பிறரின் உதிரத்தை உறிஞ்சிவதிலோ அல்லது ஒரு வாய்ப்பாக கருதுவதிலோ எவருடைய உள்ளத்திலும் எந்தவித தயக்கமும் ஏற்படுவதில்லை.
*பொதுவுடைமை ஆட்சியில், ஒருவரின் தேவைகளைப் பூர்த்தி செய்வது அரசின் பொறுப்பாகிறது. இந்நிலையில் உதவ வேண்டும் என்ற உணர்வுகள் உங்கள் உள்ளத்தில் எப்படி சுரக்க முடியும்? எந்த ஒரு அமைப்பில் மனிதர்கள், இயந்திரங்களைப் போல் பயன்படுத்தப்படுகின்றர்களோ, அந்த அமைப்பில் நீங்கள் மனிதர்களாக எப்படி வாழ முடியும்? மனிதர்கள் இயந்திரங்களை போல் இயங்கியும், அவர்களின் தேவையை அரசு ஓர் இயந்திரத்தை போல் பூர்த்தி செய்து வந்தால், அங்கே உயர்ந்த மனிதாபிமான உணர்சிகளுக்கு என்ன பணி இருக்க முடியும்? எந்த ஒரு அமைப்பு மனிதனை, மனிதத் தன்மையிலிருந்தே விடுவித்து விடுகின்றதோ அந்த அமைப்பினை இஸ்லாத்துடன் எப்படி ஒப்பிடமுடியும்? இஸ்லாமிய சமுதாய ஒற்றுமைக்கு வகை இருப்பதுபோல், இஸ்லாமிய ஆட்சியின் பொருளாதார முறைகளும், இதர ஆட்சிகளின் முறைகளோடு வேறுபடுகின்றன. இஸ்லாமிய முறையில் வருமானத்திற்கான தகாத (ஹராம்) சகல வழி முறைகளும் அகற்றப்படும் சிறந்த (ஹலால்) தகுமான வழிமுறைகளே அனுமதிக்கப்படும்

